Untitled Document

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது

0

கோவை நகரில் நேற்று மாலை ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை,பல இடங்களில் லேசான மழைத்தூரலும், பல இடங்களில் கன மழையும் பெய்தது மேலும் கோவையை சுற்றியுள்ள பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் மழை பெய்தது.

இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

பொள்ளாச்சி 30 மில்லி மீட்டர் , பெரியநாயக்கன்பாளையம் 2 மில்லி மீட்டர், வேளாண் பல்கலைக்கழகம் 5 மில்லி மீட்டர், சின்கோனா 148 மில்லி மீட்டர், சின்னக்கல்லார் 142 மில்லி மீட்டர், வால்பாறை பி.ஏ.பி. 60 மில்லி மீட்டர், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 62 மில்லி மீட்டர், மேலும் பீளமேடு, மேட்டுப்பாளையம், கோவை தெற்கு பகுதிகளிலும் லேசான மழைத்தூரலும் காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 449 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மழையின் காரணமாக கோவையை சுற்றியுள்ள அணைகளான சிறுவாணி, ஆழியார் மற்றும் பில்லூர் அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இன்று காலை நிலவரப்படி பில்லுரு அணையிலிருந்து 451 கன ஆடி தண்ணீரும் , ஆழியாறு அணையிலிருந்து 80 கன ஆடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது..

Share.

About Author